செய்திகள்

நம்புங்கள் ! - 25 ஆண்டுகள் திரைப்பயணம் குறித்து சூர்யா உருக்கம்

DIN

திரையுலகில் நடிகராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து சூர்யா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

வசந்த் இயக்கத்தில்  விஜய் - சூர்யா  இணைந்து நடித்த படம் 'நேருக்கு நேர்'. இயக்குநர் மணிரத்னம் தயாரித்த இந்தப் படம் இன்றுடன் வெளியாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 

அதாவது நடிகராக சூர்யா திரையுலகில் அடியெடுத்துவைத்து 25 ஆண்டுகளாகிறது.  வெற்றி, தோல்விகள் போட்டிகள், சவால்கள் நிறைந்த இந்தத் திரையுலகில் ஒரு நடிகராக 25 ஆண்டுகளைக் கடப்பது அவ்வளவு எளிது கிடையாது. 

'நேருக்கு நேர்' படம் வெளியானபோது  பல இதழ்கள் சூர்யாவுக்கு நடிக்கத் தெரியவில்லை, நடனமாடத் தெரியவில்லை எனக் கடுமையாக விமர்சித்தன. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இயக்குநர் பாலாவின் 'நந்தா' படத்தில் சூர்யாவின் நடிப்பை அதே இதழ்கள் புகழ்ந்து தள்ளின. 

அதன் பிறகு காக்க காக்க, கஜினி, வேல், ஆறு போன்ற கமர்ஷியல் படங்களாக இருக்கட்டும்,  பேரழகன், பிதாமகன் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக இருக்கட்டும் தனித்துவமான நடிப்பை வழங்கினார். ்அதன் காரணமாக சூர்யா தனது ரசிகர்களால் நடிப்பின் நாயகன் என்று அழைக்கப்படுகிறார். 

இதில் உச்சகட்டமாக சூர்யாவுக்கு 'சூரரைப் போற்று' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சிறந்த படங்களையும் தயாரித்துவருகிறார். 

இந்த நிலையில் தனது 25 ஆண்டுகால திரையுலகம் பயணம் குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பகிர்ந்துள்ளார். அதில், உண்மையில் அழகான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள். கனவு காணுங்கள். நம்புங்கள் - உங்கள் சூர்யா எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT