செய்திகள்

விடுதலை படத்தின் பட்ஜெட் எவ்வளவு? வெற்றிமாறன் பதில்

DIN

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து ‘விடுதலை’ என்கிற தலைப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் முன்னதாக,  ‘விடுதலை’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் அவரிடம் விடுதலை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளிக்கும்விதமாக பேசிய வெற்றிமாறன், ‘ தயாரிப்பாளர் எல்ரெட் குமாரை அணுகியபோது ‘விடுதலை’ படத்தை எடுக்க ரூ.4 கோடி வரை செலவாகும் என்றேன். ஆனால், இப்போது வரை படப்பிடிப்பு செலவு ரூ.40 கோடியைக் கடந்துள்ளது. இன்னும் சில முக்கிய காட்சிகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்னும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைவில்லை என்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே  ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முன்வந்ததாகத் தெரிகிறது. 

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கைலாசநாதா் கோயில் ஓவியங்களை வரைந்த மாணவா்கள்

ராணிப்பேட்டை: நீா்,மோா் பந்தல் அமைக்க அமைச்சா் ஆா்.காந்தி வேண்டுகோள்

நட்சத்திர விநாயகா் கோயில் கஜமுகாசூரன் வதம்

மூன்று மண்டலங்களில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மது விற்ற மூவா் கைது

SCROLL FOR NEXT