செய்திகள்

பிரம்மாஸ்திரம்: முதல் மூன்று நாள் வசூல் எழுப்பும் கேள்வி!

பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் மூன்று நாள்களின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பிரம்மாஸ்திரம் படத்தின் முதல் மூன்று நாள்களின் வசூல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அமிதாப் பச்சன், ரன்பிர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், நாகார்ஜுனா நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கிய படம் - பிரம்மாஸ்திரம் முதல் பாகம்: ஷிவா. மணிகண்டன் உள்பட ஐந்து பேர் ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளார்கள். இணை தயாரிப்பாளர் - கரண் ஜோஹர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள 3-வது படம் இது. பிரம்மாஸ்திரம் படம் உலகம் முழுக்க 8,913 திரையரங்களில் திரையிடப்பட்டுள்ளது. பிரம்மாஸ்திரா என்கிற பெயரில் ஹிந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் பிரம்மாஸ்திரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

பிரம்மாஸ்திரம் படம் முதல் நாளன்று உலகெங்கும் அனைத்து மொழிகளிலும் ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வார இறுதியில் அதாவது முதல் மூன்று நாள்களில் உலகெங்கும் ரூ. 224 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5,000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் ரூ. 125 கோடியை வசூலித்துள்ளது. 

ரூ. 410 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் ஆரம்ப வசூல் அமர்க்களமாகவே உள்ளது. எனினும் தனது தயாரிப்புச் செலவைத் தாண்டிய வசூலை அள்ளி தயாரிப்பாளருக்கும் இதர தரப்பினருக்கும் லாபத்தை அளிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 2-வது வார இறுதி நாள்களிலும் இதேபோல நல்லவிதமாக வசூலை அள்ளினால் மட்டுமே லாபம் அளிக்கக் கூடிய படமாக இருக்கும் என அறியப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கர்பா குயின்... அனன்யா!

மகளிர் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!

பூங்காற்றுத் திரும்புமா.... மான்யா!

முஸ்லிம் மக்கள்தொகை பெருக்கம் குறித்து அமித் ஷா கருத்து: காங். கடும் கண்டனம்!

எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!

SCROLL FOR NEXT