செய்திகள்

நான் விரும்பியது 18 வயதில் கிடைத்தது. ஆனால்...: ஆண்ட்ரியா உருக்கம்

எனக்கு 18 வயதான பிறகு தான் என் தந்தை எனக்கு...

DIN


பியானோ மீதான தனது விருப்பம் தொடர்பாகப் பதிவு எழுதியுள்ளார் பிரபல நடிகை ஆண்ட்ரியா.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் ஆண்ட்ரியா. மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 விரைவில் வெளியாகவுள்ளது. 

ஃபிளேவர்ஸ் என்கிற தன்னுடைய ஆங்கில இசை ஆல்பம் விரைவில் வெளியாவதையொட்டி இன்ஸ்டகிராமில் ஆண்ட்ரியா கூறியதாவது:

என்னுடைய தாத்தா ரயில்வே துறையில் பணியாற்றினார். என்னுடைய தந்தை தான் எங்களுடைய குடும்பத்தில் முதல்முதலாகப் பட்டப்படிப்பை முடித்தவர். வழக்கறிஞர். பைக், வாடகை வீட்டிலிருந்து கார், சொந்தமாக அபார்ட்மெண்ட் என மாறினோம். எங்களுடைய வளர்ச்சி மெதுவாக, உறுதியாக, உண்மையாக இருந்தது. நாங்கள் விரும்பியதை வீட்டில் வாங்கித் தந்தார்கள். ஆனால் பியானோ வாங்குவது என்பது சொகுசாக இருந்தது. என்னிடம் பியானோ இல்லாமலேயே பியானோ இசை பற்றி நான் படித்தேன். பியானோ தேர்வுகளுக்கு முன்பு நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று பியானோவில் பயிற்சி எடுப்பேன். 

எனக்கு 18 வயதான பிறகு தான் என் தந்தை எனக்கு பியானோ வாங்கித் தந்தார். ஆனால் முரண்பாடாக அப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் தந்ததால் பியானோ வகுப்புகள் பின்னுக்குச் சென்றன. என்னிடம் இப்போதும் பியானோ உள்ளது. என்னுடைய அறையில் பெருமையுடன் இடம்பிடித்துள்ளது. நான் பாடல் எழுதுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருணாசலில் உண்டு உறைவிடப் பள்ளியில் தீ விபத்து: மாணவர் பலி, மூவர் காயம்

நடிகையின் மனதில்... ரூபா!

யாசிக்கிறேன்... திவ்யா துரைசாமி!

மூவர் சதம்: 431 ரன்கள் குவித்த ஆஸி.!

மிசோரத்தில் 48 சுரங்கங்கள், 53 பாலங்கள் வழியாக ரயில்! செப். 13-ல் மோடி தொடக்கி வைக்கிறார்!

SCROLL FOR NEXT