த்ரிஷா, விக்ரமைத் தொடர்ந்து டிவிட்டரில் பெயரை மாற்றிய நடிகர் கார்த்தி 
செய்திகள்

த்ரிஷா, விக்ரமைத் தொடர்ந்து டிவிட்டரில் பெயரை மாற்றிய நடிகர் கார்த்தி

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார்.

DIN

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தில் வந்தியத் தேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி தனது பெயரை டிவிட்டரில் மாற்றியுள்ளார். டிவிட்டரில் ‘வந்தியத்தேவன்' என அவர் பெயர் மாற்றம் செய்துள்ளார். 

முன்னதாக நடிகை த்ரிஷா குந்தவை என்றும், விக்ரம் ஆதித்த கரிகாலன் என்றும், ஜெயம்ரவி அருண்மொழி வர்மன் என்றும் தங்களது டிவிட்டர் பெயரை மாற்றம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT