செய்திகள்

''ஆபரேசன் பண்றதுக்கு முன்னாடி இதெல்லாம் பண்ணுங்க'' - தனது மகளின் நிலை குறித்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உருக்கம்

தனது மகளின் நிலை குறித்து நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

DIN

தனது மகளின் நிலை குறித்து நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். 

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் நீண்ட இடைவேளைக்கு பிறகு சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இதுகுறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தனது மகள் ஸ்ரீயா சந்தித்த பிரச்னை குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

தனது மகளுக்கு கரோனா பாதிப்புக்கு பிறகு ஓவேரியன் சிஸ்ட் எனப்படும் கருப்பை கட்டி ஏற்பட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரையின் படி லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அறுவை சிகிச்சை அவருக்கு சில பிரச்னைகளைக் கொடுத்ததாகவும்  தெரிவித்த அவர் 6 மாதங்களாகியும் இந்த பிரச்னை சரியாகவில்லை எனவும் விரைவில் தனது மகள் குணமாவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

மேலும், கடந்த 6 மாதங்களாக நிறைய பாடங்களைக் கற்றோம். முக்கியமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் முன் பல மருத்துவர்களின் கருத்துக்களை கேளுங்கள். எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன் போன்றவற்றை செய்து  அறுவை சிகிச்சை தேவை குறித்து தெரிந்துகொள்ளுங்கள். யுஎஸ்ஜி எப்படும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மட்டும் போதுமானாதாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

SCROLL FOR NEXT