செய்திகள்

ஆடை குறைந்தால் வாய்ப்பு கிடைக்குமா? ரம்யா பாண்டியன் பகிர்ந்த புதிய கவர்ச்சிப் படங்கள்!

நடிகை ரம்யா பாண்டியன் இப்போது வெள்ளை நிறத்துக்கு மாறிக் கவர்ச்சிப் படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

DIN

சில நாள்களுக்கு முன் கறுப்பு உள்ளாடைகளை மட்டும் அணிந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட சமூக ஊடகங்களைக் கலக்கிய நடிகை ரம்யா பாண்டியன் இப்போது அப்படியே வெள்ளை நிறத்துக்கு மாறிக் கவர்ச்சிப் படங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

பளிச்செனத் தெரியும் வெள்ளை நிற உள்ளாடைகளை மட்டும் அணிந்தவாறு, இன்ஸ்டாகிராமிலும் டிவிட்டரிலும் தற்போது ரம்யா பாண்டியன் பகிர்ந்திருக்கும் புகைப்படங்கள் வைரலாகத் தொடங்கியுள்ளன.

ரம்யாவின் படங்களுக்கு ஒருபக்கம் சூப்பர் கலக்குறீங்க என்ற பாராட்டுகளும்  இதெல்லாம் தேவையா? என்று இன்னொரு பக்கம் விமர்சனங்களுமாக இருக்கின்றன இவருடைய கவர்ச்சிப் படங்களுக்கான எதிர்வினைகள்.

தமிழில் பெரிதும் பேசப்பட்ட ஜோக்கர் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். தொடர்ந்து சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ’ஆண் தேவதை’,  ’ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார் ரம்யா பாண்டியன். ஆனால், என்ன காரணமோ உருப்படியான திரைப்படங்கள் மட்டும் அவருக்கு அமையவில்லை.

இந்த நிலையில்தான், அடிக்கடி ரம்யா பாண்டியன் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றிவருகிறார்.

சில நாள்களுக்கு முன் கறுப்பு நிறத்தில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த நிலையில்  கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வைரலாக்கினார். 

அந்தக் கறுப்புக் கவர்ச்சி அலை ஓய்வதற்கு முன்னரே தற்போது, இன்னும் கொஞ்சம் மெருகேற்றி, வெள்ளை நிறத்தில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த படங்களை ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன். 

ஆடை குறைந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ, அடுத்து என்ன மாதிரியான படங்களைப் பதிவேற்றுவார் நடிகை ரம்யா பாண்டியன் என்று சஸ்பென்ஸ் கலந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT