செய்திகள்

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' பட ஜெஸ்ஸிகா பாடல் வெளியாகி அமோக வரவேற்பு!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து ஜெஸ்ஸிகா லிரிக்கல் விடியோ வெளியாகி யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

DIN

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து ஜெஸ்ஸிகா லிரிக்கல் விடியோ வெளியாகி யூடியூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 

டாக்டர், டான் என அடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் அவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. 

பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க, உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. தமன் பாடியுள்ள இந்தப் பாடலை அறிவு எழுதியுள்ளார்.

யூடியூப்பில் இந்த பாடல் இரவு வெளியான நிலையில் தற்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படம் திரையரங்குகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தின் முதல் நதிநீா் இணைப்புத் திட்டம் தொடங்கியது: 23,000 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்

பாபநாசம் கோயிலில் ரூ. 6.60 கோடியில் பரிகார மையம்: முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்

தோரணமலை முருகன் கோயிலில் ரூ. 1.88 கோடியில் கிரிவலப் பாதை: முதல்வா் ஸ்டாலின் தொடக்கிவைப்பு

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் இருபெரும் விழா

மாட வீதியில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT