செய்திகள்

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ‘நானே வருவேன்’ ஏன்? தயாரிப்பாளர் பதில்

பொன்னியின் செல்வத்துடன் நானே வருவேன் படத்தை வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார்.

DIN

பொன்னியின் செல்வத்துடன் நானே வருவேன் படத்தை வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் தாணு விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் மணிரத்தனத்தின் பொன்னியின் செல்வன் அக்டோபர் 30-ல் வெளியாகவுள்ள நிலையில், இயக்குநர் செல்வராகவனின் நானே வருவேன் அக். 29-ல் வெளியாகவுள்ளது.

மயக்கம் என்ன படத்துக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணி இணைந்துள்ள படம் நானே வருவேன். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, இந்துஜா, எல்லி ஏவிஆர்ராம், பிரபு, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் சார்பாக தாணு படத்தை தயாரிக்கிறார். இந்த படம் அக்டோபர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ள இயக்குநர் மணி ரத்னம் அக்டோபர் 30-ல் படத்தை வெளியிடவுள்ளார். இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நானே வருவேன் தயாரிப்பாளர் தாணு, பொன்னியின் செல்வத்துடன் படத்தை வெளியிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,

அசுரன் படத்தை பண்டிகையின் போதுதான் வெளியிட்டேன். அதேபோல், இப்போதும் 9 நாள்கள் பண்டிகை விடுமுறையை விடமாட்டேன். பண்டிகையின்போது நிறைய படம் வந்திருக்கின்றன. நான்கு படங்கள் வெளியானால்கூட ஓடும். இதன்மூலம், எனக்கும் பிரச்னை இல்லை, அவர்களுக்கும் பிரச்னை இல்லை என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT