பிரபல தமிழ் நடிகையை காதல் திருமணம் செய்யவிருக்கும் வினய்: சுவாரசியத் தகவல்
நடிகர் வினய் விரைவில் காதல் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவின் 'உன்னாலே உன்னாலே' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் வினய். தொடர்ந்து 'ஜெயம் கொண்டான்', 'என்றென்றும் புன்னகை' உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடிகர் வினய் வில்லனாக மிரட்டினார். இந்தப் படத்தில் அவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பினால் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்', சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.
தற்போது சூர்யா தயாரிப்பில் அருண் விஜய் மற்றும் அவரது மகன் இணைந்து நடித்துள்ள 'ஓ மை டாக்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | நடிகை ராஷ்மிகா மந்தனா பிறந்த நாள்: ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற பாடல்கள் (விடியோக்கள்)
நடிகர் வினய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை விமலா ராமனுடன் இருக்கும் படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். தற்போது இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வினய் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து இருவரும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவலை இருவரும் உறுதிபடுத்தவில்லை. 'டேம் 999' படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் பாலசந்தரின் 'பொய்' படத்தின் மூலம் விமலா ராமன் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து 'ராமன் தேடிய சீதை', 'இருட்டு' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.