இந்தக் காரணத்தால் 'பீஸ்ட்' படம் கரூரில் வெளியாகாது - ரசிகர்கள் அதிர்ச்சி
பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திரையரங்குகளில் வெளியாகாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பீஸ்ட் திரைப்படம் நாளை (ஏப்ரல் 13) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தைக் காண ஆவலாக காத்திருக்கின்றனர். நிறைய திரையரங்குகளில் முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் மாநகராட்சியில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகாது என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. திரையங்க உரிமையாளர்களுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த முடிவை கரூர் திரையரங்க உரிமையாளர்கள் எடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | 'நம் வாழ்க்கையில நிறைய விஷயங்கள் நடக்கும்...'' - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்கு இளையராஜா அறிவுரை
பீஸ்ட் படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இந்திய அளவில் பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.