செய்திகள்

திருமண புகைப்படங்களை வெளியிட்டார் ஆலியா பட்

DIN


நடிகர்கள் ரன்பீர் கபூர்-ஆலியா பட் திருமணம் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் நடைபெற்றது.

திருமண புகைப்படங்களை நடிகை ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படங்களுடன் "வீட்டில் இன்று குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செலவழித்த எங்களுக்குப் பிடித்த இடமான பால்கனியில் திருமணம் செய்துகொண்டோம்.

ஏற்கெனவே ஏராளமான நினைவுகள் உள்ள நிலையில், இருவரும் இணைந்து மேற்கொண்டு நினைவுகளைக் கட்டமைக்கவுள்ளோம். அன்பு, சிரிப்பு, அமைதி, சினிமா இரவுகள், குட்டிச் சண்டைகள் உள்ளிட்டவை நினைவுகளில் நிறைந்துள்ளன.

இந்த முக்கியமானத் தருணத்தில் உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி. இந்தத் தருணத்தை அது மேலும் சிறப்பாக்கியது.

அன்புடன் ரன்பீர் மற்றும் ஆலியா" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரன்பீர், ஆலியா திருமணத்தில் கரீனா கபூர், கரண் ஜோஹர், ஸோயா அக்தர், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT