முகப்பு
செய்திகள்

ஆர்யாவின் 'கேப்டன்' ஜெர்ஸியை வெளியிட்ட சூர்யா

நடிகர் ஆர்யாவின் சைக்கிளிங் அணியின் ஜெர்ஸியை சூர்யா வெளியிட்டுள்ளார். 

Updated On : 4 ஆகஸ்ட், 2022 at 5:10 PM
பகிர்:

நடிகர் ஆர்யாவின் சைக்கிளிங் அணியின் ஜெர்ஸியை சூர்யா வெளியிட்டுள்ளார். 

டெடி படத்துக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் - ஆர்யா இணைந்துள்ள படம் கேப்டன். இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க, எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய நினைவுகள் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. கேப்டன் படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் சார்பாக வெளியிடுகிறார். 

ஆர்யா சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்டவர். தொடர்ச்சியாக ஒரு குழுவாக இணைந்து சைக்கிளிங் சென்று வருகிறார். லண்டனில் நடைபெறவிருக்கும் சைக்கிள் போட்டியில் ஆர்யா தனது குழுவினருடன் கலந்துகொள்வார் என தெரிகிறது. 

இந்த நிலையில் அவரது அணியின் ஜெர்ஸியை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஆர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் பகிர்ந்து சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.