முகப்பு
செய்திகள்

தனுஷின் 'வாத்தி' பட ஹீரோயின் யார் தெரியுமா ?

வாத்தி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கவிருக்கிறார்.  

Updated On : 3 ஜனவரி, 2022 at 2:41 PM
பகிர்:

தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் வாத்தி படத்தின் பூஜை இன்று (திங்கள் கிழமை) நடைபெற்றது. துவக்க விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

பிரபல தெலுங்கு இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இந்தப் படத்துக்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற 5 ஆம் தேதி முதல் துவங்குகிறது. 

வெங்கட் அட்லுரி இயக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இவர் மலையாளப் படமான தீவண்டி படத்தின் மூலம் பிரபலமானவர். உயரே, ஆணும் பெண்ணும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 

தெலுங்கில் பீம்லா நாயக் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே களரி, ஜுலைக் காற்றில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனுஷுடன் நடிக்கும் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.