முகப்பு
செய்திகள்

‘வலிமை’ வசூல் எவ்வளவு? தயாரிப்பாளர் வெளியிட்ட தகவலால் அதிர்ந்த ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

Updated On : 23 மார்ச், 2022 at 10:28 PM
பகிர்:

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தமிழக அளவில் 1000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

தொடக்கம் முதலே நல்ல வரவேற்பைப் பெற்ற வலிமை திரைப்படமானது உலக அளவில் முதல் நாளில் மட்டும் ரூ.70 கோடி அளவுக்கு வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இதுவரை உலகம் முழுவதும் வலிமை திரைப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இதனை அவர் தனது சுட்டுரை பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.