முகப்பு
செய்திகள்

முத்தையா இயக்கத்தில் ஆர்யா- சித்தி இத்னானி!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. 

Updated On : 9 அக்டோபர், 2022 at 3:20 PM
பகிர்:

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யாவுடன் நடிகை சித்தி இத்னானி நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது. 

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் முத்தையா ஆர்யாவுடன் இணைந்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தின் கதாநாயகி சித்தி இத்னானி நடிக்க உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 

ஆர்யாவின் 34வது படமாக உருவாகும் இப்படத்திற்கு பூஜை இன்று (அக்.9)  நடைபெற்றது. படங்களை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். 
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.