தக தகவென ஜொலிக்கும் தமன்னா (புகைப்படங்கள்)
தீபாவளி உடையில் தமன்னா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தீபாவளி உடையில் தமன்னா பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் நடித்துவருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.
Advertisement
இதையும் படிக்க | தேவர் மகள்: சிவாஜியாக கமல் , சக்திவேலாக அக்ஷரா ஹாசன் (புகைப்படம்)
இந்த நிலையில் புது உடையில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தமன்னா தகதகவென ஜொலிப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள்.