முகப்பு
செய்திகள்

நடிகர் விஷாலை சந்தித்த லோகேஷ் கனகராஜ்: அடுத்தது என்ன? 

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஷாலை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 31 அக்டோபர், 2022 at 7:11 PM
பகிர்:

மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஷாலை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் பொங்களுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்து விஜய் மீண்டும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார். ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த படம் எடுக்கவிருப்பதால் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு முதலில் நடிகர் பிருத்விராஜ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அவர் தேதி பிரச்சினையில் விலகியதால் நடிகர் விஷால் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. 

Advertisement

நடிகர் விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் விஜய் படத்தில் விஷால் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக ரசிகர்கள் விஜய்யுடன் விஷால் சண்டையிட்டால அற்புதமாக இருக்குமென சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.