சுந்தர்.சியின் 'காஃபி வித் காதல்' : டிரைலர் வெளியானது!
இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காஃபி வித் காதல்’ படத்தின் டிரைலர் வெளியானது.
இயக்குநர் சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காஃபி வித் காதல்’ படத்தின் டிரைலர் வெளியானது.
இயக்குநர் சுந்தர்.சியின் படங்கள் என்றாலே 'கலகலப்பு'க்கு பஞ்சமிருக்காது. கடைசியாக ஆக்ஷன், அரண்மனை 3 போன்ற திரில்லர் படங்களை இயக்கிய சுந்தர்.சி மீண்டும் தனது பலமான நகைச்சுவை படத்தைக் கையிலெடுத்திருக்கிறார்.
காஃபி வித் காதல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த், யோகி பாபு, மாளவிகா ஷர்மா, அம்ரிதா, திவ்யதர்ஷினி, சம்யுக்தா, கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படம் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக வெளியிடுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.