இளையராஜாவுடன் கைகோர்க்கும் பிரபல இயக்குநர்
இசையமைப்பாளர் இளையராஜா தன் அடுத்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா தன் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக பிரபல இயக்குநர் தெரிவித்துள்ளார்.
'நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
அவர் அடுத்ததாக தமிழில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில், அப்படத்திற்குப் பின் அவர் இயக்கும் மற்றொரு படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.