முகப்பு
செய்திகள்

பத்து தல: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 22 ஏப்ரல், 2023 at 11:06 AM
பகிர்:

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.  இந்தப் படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கினார். 

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். படம் வெற்றியடைந்ததிற்காக சிம்பு ரசிகர்களுக்கு விருந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படம் வரும் 27ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.