செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 படத்திலிருந்து முன்னோட்ட காட்சி வெளியீடு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இருந்து முன்னோட்ட காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகியுள்ளது.

DIN

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் இருந்து முன்னோட்ட காட்சிகள்(ஸ்னீக் பீக்) வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டு, முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் நாளை(ஏப்ரல் 28) வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான புரமோஷன் பணிகள் கடந்த சில நாள்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் பாகம் வரும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இதில், கார்த்தியும் ஜெயராமும் உரையாடிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

நடிகர் கமல்ஹாசன் குரலில் பொன்னியின் செல்வன்-2 படத்தின் அறிமுக விடியோ சமீபத்தில் வெளியாகியது. முதல் பாகத்திற்கும் கமல்ஹாசன் குரலில் கதாபாத்திரங்கள் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT