செய்திகள்

ரசிகர்கள் தொல்லை: முகநூல் படத்தை நீக்கிய ஃபஹத் ஃபாசில்!

மாமன்னன் படத்தில் ரத்னவேலு கதாபாத்திரத்தில் நடித்த ஃபகத் ஃபாசில் ரசிகர்களின் தொல்லை காரணமாக முகநூல் படத்தை நீக்கியுள்ளார்.

DIN

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடித்த மாமன்னன் திரைப்படம் கடந்த மே - 29 திரையரங்குகளில் வெளியானது.

படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தில் வில்லனாக ரத்னவேலு கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்திருந்தார். திரையரங்குகளில் இக்கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை.

ஆனால், ஓடிடியில்  வெளியானதும் ஃபஹத் அதிக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். முக்கியமாக, படத்தில் ஆதிக்க சாதியாளராக நடித்த ஃபஹத்தின் காட்சித் துண்டுகளை, தங்கள் சாதியைக் குறிக்கும் பாடல்களுடன் இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து, ஃபஹத் ஃபாசில் தன் முகநூல் பக்கத்தில் முகப்புப் படங்களில் ஒன்றாக ரத்னவேலு தோற்றப் புகைப்படத்தை பதிவேற்றினார். இதனால், உற்சாகமடைந்த ‘ரத்னவேலு’ ரசிகர்கள் கமெண்ட்களில் சாதிவெறியைத் தூண்டும் வகையிலான விடியோக்களையும் கருத்துக்களையும் பதிவிட்டனர்.

தற்போது, இந்தத் தொல்லைகளால் தான் பதிவேற்றிய படத்தை நீக்கியுள்ளார் ஃபஹத்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT