கையெடுத்துக் கும்பிடுகிறேன்.. குடிப்பழக்கத்தை விடுங்கள்: ரஜினி
குடிப்பழக்கம் இல்லையென்றால் தன்னால் இன்னும் பெரிய உச்சங்களுக்குச் சென்றிருக்கும் முடியும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் காணொலியை வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சன் டிவி சேனல் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது. தற்போது, அதற்கான புரொமோக்கள் வெளியாகி வருகின்றன.
இதையும் படிக்க: மாமன்னன் - உலகளவில் சாதனை!
இந்நிலையில், அதில் நடிகர் ரஜினிகாந்த், “எனக்குக் குடிப்பழக்கம் மட்டும் இல்லாமலிருந்தால் இந்த ரஜினி இன்னும் மிகப்பெரிய உச்சத்தில் இருந்திருப்பார். உங்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். தயவுசெய்து குடிப்பழக்கத்தை கைவிடுங்கள்” எனக் கூறியுள்ளார்.