செய்திகள்

குறுகிய காலத்தில் சுபம்! இந்த வாரத்துடன் முடிகிறது பாரதி கண்ணம்மா -2!

ரோஜா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த சிப்பு சூர்யன், விணுஷா தேவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

DIN


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா -2 தொடர் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.  இதனால், அந்த நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தின் நிறைவுப் பகுதி இந்த வாரம் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  

ரோஜா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த சிபு சூர்யன், விணுஷா தேவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகிவருகிறது. தற்போதுவரை 115 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளன. 

இந்தத் தொடரை பிரவீன் பென்னட் இயக்குகிறார். பாரதி கண்ணம்மா
முதல் பாகத்தை இயக்கியவரும் இவர்தான்.  இந்தத் தொடரின் திரைக்கதையும் இறுதிக்கட்டத்தை எட்டியவாறு செல்கிறது. இந்தத் தொடரில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் செளந்தர்யாவின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்து முடிந்தது. தற்போது வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமண ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றன. 

பாரதி கண்ணம்மா -2 தொடருக்கு அடுத்தபடியாக ஆகஸ்ட் 7 முதல் இரவு 10 மணிக்கு கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முதல்முறையாக சீரியலில் களமிறங்கியுள்ளார். இதனால், இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT