செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன்: விக்னேஷ் சிவன் 

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

DIN

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், மற்றும் சிவராஜ்குமார் வில்லனாகவும் மோகன் லால் சிறப்பு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடித்த படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் தற்போதே கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர். மேலும் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்படைந்துள்ளது. 

இந்த நிலையில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தமாரே என்கிற பாடலை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பாடலை இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக முதல் பாடலை எழுதியுள்ளேன். இதுபோன்ற தருணங்களுக்காகதான் வாழ்கிறோம். இயக்குநர் நெல்சம் மற்றும் அனிருத்திற்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி தற்கொலை

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் வைத்திருந்தவா் கைது

பாதாள காளியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

கும்பக்கரை அருவியில் வெள்ளம்

SCROLL FOR NEXT