ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சீன அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் 7-ஆவது எடிஷன், சென்னையில் வியாழக்கிழமை தொடங்கியது. இன்று (ஆக. 7) நடைபெற்ற போட்டியில் சீனா - பாகிஸ்ஹான் அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி பாகிஸ்தான் அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சீன அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது.
இதற்கு முன்பு கொரியா அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தை பாகிஸ்தான் அணி சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.