செய்திகள்

வெளியானது கிங்க் ஆஃப் கோதா டிரைலர்!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவான ‘கிங்க் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது. 

தொடர்ந்து துல்கர் ’கிங் ஆஃப் கோதா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார்.  இதில் சார்பட்டா பரம்பரை புகழ் டேன்ஸிங் ரோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, பிரசன்னா, செம்பன் வினோத், அனிகா சுரேந்திரன் என பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘கலாட்டாக்காரன்’ பாடலின் லிரிக்கல் விடியோவைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.

இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி!

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

SCROLL FOR NEXT