செய்திகள்

5வது முறையாக இணைந்த மோகன்லால்- ஜீத்து ஜோசப்: ரசிகர்கள் ஆரவாரம்!

DIN

பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் நடிகர் மோகன்லால் வைத்து 2013இல் எடுத்த த்ரிஷ்யம் திரைப்படம் கேரளாவில் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இதனை தமிழில் நடிகர் கமலை வைத்து ‘பாபநாசம்’ என ஜீத்து ஜோசப் இயக்கி அந்தப் படமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் ரீமெக் செய்யப்பட்டது. 

த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பில்... 

2019இல் ‘த்ரிஷ்யம் 2’ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 3வது பாகமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘டுவெல்த் மேன்’ எனும் த்ரில்லர் படத்தினை கரோனா காலகடத்தில் எடுத்து ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படமும் நல்ல வரவேற்பினை பெற அடுத்து 4வது முறையாக ‘ராம்’எனும் பெயரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

ராம் படப்பிடிப்பில் மோகன்லால்- ஜீத்து ஜோசப். 

இந்நிலையில் தற்போது 5வது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. ஆசிர்வாத் சினிமாஸின் 33வது படமாக உருவாக உள்ள இந்தப் படத்திற்கு  ‘நெரு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. 

த்ரிஷ்யம் 2 படத்தில் வழக்கறிஞராக நடித்த சாந்தி மாயாதேவி உடன் இணைந்து திரைக்கதையை எழுதியுள்ளார் ஜீத்து ஜோசப். விஷ்ணு ஷியாம் இசையமைக்க சதீஷ் குருப் ஒளிப்பதிவு செய்கிறார்.  

நீதி வேண்டி போராடும் கதையாக உருவாகும் இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார்கள். 

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் மோகன்லால் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மிகவும் ஸ்டைலாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

லிஜோ ஜோஸ் இயக்கிய மலைக்கோட்டை வாலிபன் படம் விரைவில் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

சூர்யா படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

SCROLL FOR NEXT