முகப்பு
செய்திகள்

சினிமா எடுக்க நினைப்பவர்களுக்கு இந்தப் படம் பைபிள்: நெல்சன் கூறிய படம் எது?

ஜெயிலர் இயக்குநர் நெல்சன் சினிமா எடுக்க விரும்பும் இளைஞர்கள் இந்தப் படத்தினை நிச்சயமாக பார்க்க வேண்டுமென பரிந்துரைந்துள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 4:27 PM
பகிர்:

நடிகர் சிம்புவை வைத்து இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் பாதியிலேயே நிற்க மீண்டும் தொலைக்காட்சியிலேயே வேலைக்கு சென்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார் வாழ்க்கை இளைஞர்கள் பலருக்கும் ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. 

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்கள் அமோக வெற்றி பெற்றது. நடிகர் விஜய்யுடன் எடுத்த பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றாலும் நெல்சன் மிகவும் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டார். தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஆக. 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகின்றன. 4 நாள்களில் உலகளவில் இப்படம் ரூ.300 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

நேர்காணல் ஒன்றில் இயக்குநர் நெல்சன், “சினிமா எடுக்க விரும்புவர்கள் பிரேக்கிங் பேட் இணையத் தொடரினை பார்க்க வேண்டும். சினிமா ரசிகர்களுக்கு பைபிள் மாதிரி. நான் பார்த்த்திலேயே மிகச் சிறந்த படம் இதுதான். சரியாக எழுதப்பட்ட தொடர். அதன் கதாபாத்திரங்கள் வளர்ச்சி முடிவு என அருமையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார். 

இயக்குநர் நெல்சன் படங்களிலும் பிரேக்கிங் பேட் சாயல் இருப்பதாக விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். ‘பிரேக்கிங் பேட்’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் உள்ளது. 5 சீசன்கள் உள்ள இந்தத் தொடரில் மொத்தம் 64 எபிசோடுகள் உள்ளன.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.