செய்திகள்

தாய்மண்ணுக்கு வணக்கம்: ராணுவ வீரராக நடிக்கும் சிவகார்த்திகேயன்? 

DIN

சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றன. ரூ.90 கோடி அளவில் வசூலிலும் கலக்கியது குறிப்பிடத்தக்கது. 

தற்போது சிவகார்த்திகேயனின் 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

மாவீரன் இசை வெளியீட்டு மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் நல்ல உடற்கட்டுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைக்கு குல்லா அணிந்திருப்பார். எனவே ‘எஸ்கே 21’ படத்தில் புதிய தோற்றம் நிச்சயம் என அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். 

இந்நிலையில் படத்தில் இருந்து நடிகர் சிவகார்த்திகேயன் சிக்ஸ் பேக் வைத்துள்ளதாக புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

சமீபத்தில் சிக்ஸ் பேக்குடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது. அது உண்மையா அல்லது எடிட் செய்யப்பட்டதா என படக்குழு எதுவும் கூறவில்லை.  

இந்நிலையில் முதல் பார்வை போஸ்டர் வெளியாகுமென காத்திருந்த ரசிகர்களுக்கு சுதந்திர நாள் வாழ்த்தை சிவகார்த்திகேயன் பேசும் விடியோ மூலம் வெளியிட்டது படக்குழு. இதனை பகிர்ந்து தாய் மண்ணுக்கு வணக்கம் என சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

படப்பிடிப்பு காஷ்மீரிலும் நடந்து வருவதால் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளாரோ என கேள்வி எழுந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கே.எல். ராகுலை சாடிய லக்னெள உரிமையாளர்: நேரலையில் கண்ட ரசிகர்கள் ஆவேசம்!

குரூப்-2 ஏ பதிவிகளுக்கு கலந்தாய்வு எப்போது?

சென்னையில் தோனியின் கடைசிப் போட்டியா? சற்றுநேரத்தில் டிக்கெட் விற்பனை

விமானிகள் பற்றாக்குறை... ஏர் இந்தியா நிறுவன விமானங்களின் சேவை குறைப்பு

தென் சென்னை வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி பழுது!

SCROLL FOR NEXT