செய்திகள்

விபத்தில் சிக்கிய முத்தழகு தொடர் நடிகை!

முத்தழகு தொடரில் நடித்துவரும் வைஷாலி, சமீபத்தில் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

DIN

முத்தழகு தொடரில் நடித்துவரும் வைஷாலி, சமீபத்தில் விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “காரில் பயணிக்கும் போது பாதுகாப்பிற்காக சீட் பெல்ட்டை அணியுங்கள். நான் சீட் பெல்ட் அணிந்திருந்த போதிலும், எனது கார் விபத்துக்குள்ளானபோது ஏர்பேக் என்னை பெரிய விபத்தில் இருந்து காப்பாற்றியது. நெடுஞ்சாலையில் பயணம் செய்யும்போது சீட் பெல்ட் அணிவது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் வைஷாலிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து, அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகை வைஷாலி ராஜா ராணி, பாண்டியன் ஸ்டோர்ஸ், நம்ம வீட்டு பொன்னு உள்ளிட்ட தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மகராசி தொடரில் நடித்திருந்தார். தற்போது, முத்தழகு தொடரில் நடித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT