செய்திகள்

இவரது படங்களில் நடிக்காவிட்டாலும் மரியாதையுடன் பேசுவார் : கங்கனா ரணாவத் குறிப்பிடுவது யாரை? 

நடிகை கங்கனா ரணாவத் பிரபல பாலிவுட் இயக்குநர் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

DIN

தமிழில் தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை கங்கனா ரணாவத் ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது சிறந்த நடிப்பிற்காக 2 முறை தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கை வரலாற்றினை எம்ர்ஜென்சி படத்தினை தானே தயாரித்து இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் நவ.24ஆம் நாள் வெளியாக உள்ளது. 

தமிழில் தலைவி என்ற இணையத் தொடருக்குப் பின் மீண்டும் களமிறங்கியுள்ளார். ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் நடிகை கங்கனாவும் நடித்துள்ளார். இந்தப் படம் செப்.19ஆம் நாள் வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.   

தனது துணிச்சலான கருத்துகளால் அடிக்கடி சர்சையில் சிக்கிக் கொள்வது இவரது வழக்கம். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி குறித்து ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், “சஞ்சய் லீலா பன்சாலி (எஸ்எல்பி) ஒரு கலைஞனாக தனது வெற்றியையும் புகழினையும் தவறாக பயன்படுத்தியதில்லை. அவர் ஹிந்தி சினிமாவில் விரும்பியதை செய்யும் நல்ல மனிதர். சினிமாவின் மீதான காதலால் இயங்கி வருபவர். அவருடைய வேலையை மட்டுமே பார்ப்பவர். தீர்க்கமான சிந்தனை, நேர்மையான மனிதர்; வாழும் லெஜெண்ட். 

சஞ்சய் லீலா பன்சாலி

சில வருடங்களுக்கு முன்னர் எஸ்எல்பி தயாரிப்பில் இருந்து எனக்கு அளிக்கப்பட்ட பாடல் கதாபத்திரம் குறித்த வாய்ப்பினை சில காரணங்களால் மறுத்து விட்டேன். இருந்தும் அவரை சந்திக்கும்போது நன்றாக பேசுவார். கடவுள் தன் முன்னே சிரிப்பது போல கண்ணியமான சிரித்து பேசுவார். அவரது கண்களில் மரியாதை இருக்கும். குறைவான வார்த்தைகளையே பேசும் சஞ்சய் லீலா பன்சாலி அற்புதமான மனிதர்” எனக் கூறியுள்ளார். 

இதே கங்கனா ரணாவத் 2021இல் கிளாமர் பாடல்களை வைக்கும் பி கிரேட் சினிமா இயக்குநர் என விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT