முகப்பு
செய்திகள்

விஷாலின் மார்க் ஆண்டனி: 2வது பாடல் குறித்த அறிவிப்பு!

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:52 AM
பகிர்:

விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இப்படம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘அதிருதா’ பாடல் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியானது. டைம் டிராவலை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் 2வது பாடலான ‘ஐ லவ் யூ டி’ பாடல் நாளை(ஆக.23) வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.