முகப்பு
செய்திகள்

விஜய் - 68 படத்தில் அபர்ணா தாஸ்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படத்தில் அபர்ணா தாஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:53 AM
பகிர்:

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதைத் தொடர்ந்து, ‘டெஸ்ட் போட்டோஷூட்’ அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக  ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →