முகப்பு
செய்திகள்

அமெரிக்கா செல்லும் விஜய், வெங்கட் பிரபு?

விஜய் - 68 படத்திற்காக விஜய்யும் இயக்குநர் வெங்கட் பிரபுவும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:54 AM
பகிர்:

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் விஜய் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில்  நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

மேலும், இப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக  ‘டாடா’ படத்தின் மூலம் பிரபலமடைந்த அபர்ணா தாஸ் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுக்க நடிகர் விஜய்யும் வெங்கட் பிரபுவும் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் அங்கு 3டி விஎஃப்எக்ஸ் ஸ்கான் தொழில்நுட்பத்தில் லுக் டெஸ்ட் எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.