வெளியானது சலார் டிரைலர்: சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகள்!
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:49 PM
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கேஜிஎஃப் திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்கிறார். பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
Advertisement
இதையும் படிக்க: அசோக் செல்வனின் சபாநாயகன் டிரைலர்!
இந்த நிலையில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.