செய்திகள்

காதலி தற்கொலை.. புஷ்பா நடிகர் கைது!

புஷ்பா படத்தில் நடித்த நடிகர் ஜகதீஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

DIN

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து, புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனுக்கு நண்பனாக கேசவா என்கிற கதாபாத்திரத்தில்  நடித்தவர் நடிகர் ஜெகதீஷ் பிரதாப். தன் நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றதுடன் ரசிகர்களிடையே புகழடைந்தார். தற்போது, புஷ்பா - 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இளம் நடிகை ஒருவர் ஜெகதீஷ் கொடுத்த தொல்லையால் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனால், ஜெகதீஷ் கடந்த ஒரு வாரமாக தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று(டிச.6) காவல்துறை அவரைக் கைது செய்துள்ளது.

விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட பெண்ணுடன் ஜெகதீஷ்  ‘லிவ் இன்’ உறவிலிருந்தார் என்றும் கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பின், அப்பெண் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தற்கொலை செய்து கொண்ட நடிகையின் தந்தை அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT