முகப்பு
செய்திகள்

மனதைக் கவரும் ஒளிப்பதிவு.... ஃபைட் கிளப் முதல் பாடல்!

விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:23 PM
பகிர்:

நடிகரும் இயக்குநருமான உறியடி விஜய் குமார் நடிக்கும் புதிய படம் 'ஃபைட் கிளப்'. அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ள இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் தனது 'ஜி ஸ்குவாட்' நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். 

உறியடி படத்தின் மூலம் கவனம் பெற்ற விஜய்குமார் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஆக்சன் படமாக உருவாகும் 'ஃபைட் கிளப்' படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

கடந்த டிச.2 ஆம் தேதி வெளியான 'ஃபைட் கிளப்'  படத்தின் டீசரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். முழுக்க ஆக்சன் பாணியில் அதிரடியாக உருவாகியிருக்கும் டீசரின் இறுதியில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, இளையராஜாவின் ’என் ஜோடி மஞ்சக் குருவி’ பாடலின் பின்னணி இசையை அடிதடி காட்சிகளுடன் சேர்த்திருந்தது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘யாரும் காணாத விண்மீனே’ பாடலை வெளியிட்டுள்ளனர். கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் ஆகியோர் பாடியுள்ளனர். இசை - கோவிந்த் வசந்தா. இப்பாடலின் ஒளிப்பதிவு காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

டீசர் மூலம் யூடியூப்பில் 3.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.