செய்திகள்

ரூமியின் வரிகளுடன் வெளியான யஷ் படத்தின் அறிவிப்பு!

DIN

மலையாளத்தில், ‘லையர்ஸ் டைஸ்’ ,’மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். நடிகையான இவர் இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் ராஜீவ் ரவியும் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார்.

நடிகர் யஷ் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தன் 19-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

ரூமியின் புகழ்பெற்ற வரியான, ‘எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடுகிறது’ என்கிற வாசகத்தை படத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். 

கேஜிஎஃப் - 2 படத்திற்குப் பின் புதிதாக எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த யஷ், இப்படத்தில் இணைகிறார் என்கிற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

SCROLL FOR NEXT