செய்திகள்

‘சூப்பர் சிங்கர்-10’ நடுவராக பிரபல இசையமைப்பாளர்!

சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியின் நடுவராக பிரபல இசையமைப்பாளர் பங்கேற்கவுள்ளார்.

DIN

சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியின் நடுவராக பிரபல இசையமைப்பாளர் பங்கேற்கவுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஞாயிற்றுக்கிழமை மாலை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி முடிவடைந்தது.

இதில், ஸ்ரீனிதா, ஹர்ஷினி நேத்ரா மற்றும் அக்‌ஷரா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.

இந்த நிலையில், ‘சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10’ நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் நடுவர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக நடுவராக பங்கேற்கும் பாடகி அனுராதாவுடன், பாடகி சுஜாதா, பாடகர் மனோ உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் சேன் ரோல்டனும் நடுவராக பங்கேற்கவுள்ளார்.

முண்டாசுப்பட்டி, வேலை இல்லா பட்டதாரி 2, மெஹந்தி சர்கஸ், ஜெய்பீம், குட்நைட் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு சேன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

முன்னதாக, ஜூனியர் சீசனில் இசையமைப்பாளர் தமன் நடுவராக கலந்து கொண்டு பல்வேறு போட்டியாளர்களுக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

SCROLL FOR NEXT