முகப்பு
செய்திகள்

சலாரில் யஷ்!

நடிகர் யஷ், சலார் படத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 13 டிசம்பர், 2023 at 3:39 PM
பகிர்:

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. 

சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

குறிப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 

படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் யஷ் நடித்ததுள்ளதை படத்தில் பணியாற்றிய பாடகியும், குழந்தை நட்சத்திரமுமான தீர்த்தா சுபாஷ் என்பவர் நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார். யஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. சஸ்பென்ஸாக இந்த ரகசியத்தைப் படக்குழுவினர் காத்து வந்தனர்.

ஆனால், ஒரு குழந்தை நட்சத்திரம் மூலம் இது கசிந்துள்ளது சலார் குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.