செய்திகள்

இந்தப் படத்தை யார் எடுத்தது? வைரலாகும் அர்ஜுன்!

விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் அர்ஜுன் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

DIN

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இப்படப்பிடிப்பில் பங்குபெற்ற நடிகர் அர்ஜுன், இன்ஸ்டாகிராமில் தன் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதைப் பகிர்ந்ததுடன் ‘இந்தப் புகைப்படத்தை யார் எடுத்தது என தெரியுமா’? எனக் குறிப்பிட்டுள்ளார். 

விடாமுயற்சி படப்பிடிப்பில் இருப்பதால் இதை நடிகர் அஜித் எடுத்திருப்பார் என ரசிகர்கள் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

மங்காத்தா திரைப்படத்துக்குப் பின் நடிகர்கள் அஜித்தும் அர்ஜுனும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? இந்த எண்களில் புகார் அளியுங்கள்!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? - புகார் எண்கள் அறிவிப்பு!

டிகாப்ரியோ திரைப்படத்துக்கு கோல்டன் குளோப் விருது!

SCROLL FOR NEXT