செய்திகள்

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி!

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் கொட்டுக்காளி படம் தேர்வாகியுள்ளது. 

DIN

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் கொட்டுக்காளி திரைப்படம் தேர்வாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் 'கொட்டுக்காளி'. நடிகர் சூரி நாயகனாக நடித்த இப்படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். நாயகியாக அன்னா பென் நடித்துள்ளார்.

பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்தியேக திரையிடக்காக கொட்டுக்காளி திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றுள்ளது. 

கொட்டுக்காளி திரைப்படம் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில்  தேர்வாகியுள்ளதை நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டு அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மேலும், படக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகளையும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT