முகப்பு
செய்திகள்

வாடிவாசல் எப்போது? வெற்றிமாறன் பதில்!

சூர்யா நடிக்கும் வாடிவாசல் படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

Updated On : 15 டிசம்பர், 2023 at 3:44 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:56 PM

நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்திற்காகக் காளை ஒன்றை வளர்த்து வருகிறார்.

சமீபத்தில், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் எடுத்தனர்.

கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது.

Advertisement

கங்குவாக்குப் பின் சுதா கொங்காரா படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “விடுதலை இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததுமே மிக விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.