செய்திகள்

கேஜிஎஃப்-க்கும் சலாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை: இயக்குநர் பிரசாந்த் நீல் அதிரடி!

சலார் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

DIN

கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல்  நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இரு நண்பர்களுக்கு இடையேயான படமென இயக்குநர் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். டிரைலரிலும் அதைக் காண முடிந்தது. 

சலார் திரைப்படம் வரும் டிச.22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில், சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வைகளை கடந்திருந்தது. 

கேஜிஎஃப் படத்தில் ராக்கி உயிரிழந்தபோது இருந்த அதே நேரத்துக்கு சலார் பட டீசர் வெளியானதாக ரசிகர்கள் பல ஆராய்ச்சிகளை கூறினார்கள். 

நேர்காணலில் இயக்குநர் பிரசாந்த் நீல், “கேஜிஎஃப் படத்துக்கும் சலார் படத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. ரசிகர்கள் தாங்களாகவே ஏதோதோ கண்டுபிடித்து சொல்லுகிறார்கள். ஆனால் அது வேறு இது வேறு. இது இரண்டு நண்பர்களுக்கு உண்டான படம். கான்ஸார் எனும் பகுதியை பற்றியது. 

ஒருவேளை படத்தின் கலர், மேக்கிங் ஸ்டைல் மக்களுக்கு அப்படி நினைப்பை தந்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT