செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ரவீனாவின் உறவினர்!

பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற ரவீனாவின் உறவினர் ஒருவர் விதிகளை மீறியதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

DIN

பிக் பாஸ் வீட்டுக்கு சென்ற ரவீனாவின் உறவினர் ஒருவர் விதிகளை மீறியதால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாள்களை கடந்துள்ல நிலையில், இதுவரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 11 போட்டியாளர் உள்ளனர்.

இந்த வாரம் ‘ஃபிரீஸ் டாஸ்க்’ நடைபெற்று வருகிறது. அதில், போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்கு இன்று வருகை தரும் ரவீனாவின் உறவினர் ஒருவர், மணியுடன் ஒன்றாக இருப்பதாக ரவீனாவை கடுமையாக கண்டிக்கும் முதல் ப்ரோமோ வெளியானது.

இரண்டாவது ப்ரோமோவில், வெளியில் நடக்கும் விஷயங்களை ரகசிய குறியீட்டை பயன்படுத்தி ‘கோட் ரெட்’ என்று ரவீனாவிடம் அவரது உறவினர் ஒருவர் பேசுகிறார்.

இதனைத் தொடர்ந்து, விதிமுறைகளை மீறி வெளியே நடப்பதை கூறியதால், பிக் பாஸ் வீட்டைவிட்டு உடனடியாக வெளியேறும்படி ரவீனாவின் உறவினரிடம் பிக் பாஸ் கூறுவது போன்று இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வரலாற்றில் விதிமுறைகளை மீறியதற்காக குடும்பத்தினரை பாதியில் வெளியே அனுப்பியது இதுதான் முதல் முறை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT