செய்திகள்

இந்த வார டாப் 10 தொடர்களின் டிஆர்பி பட்டியல்! 

இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10  தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

DIN

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை  ஏராளமான ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை  டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த வாரம் ரசிகர்களை கவர்ந்த முதல் 10  தொடர்கள் எவை என்பதைப் பார்க்கலாம்.

சன் டிவியின் புதிய சீரியலான சிங்கப் பெண்ணே தொடர் 11.59 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

கயல் சீரியல் 11.55 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது.

சுந்தரி சீரியல் 10.04 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

எதிர் நீச்சல் தொடர் 9.75 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து நான்காவது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளது.

வானத்தைப் போல சீரியல் 9.42 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.

இனியா தொடர் 8.20 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 6-வது இடத்தில் உள்ளது.

சென்ற வாரம் 8-வது இடத்தில் இருந்த விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் 7.72  டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

சென்ற வாரம் 7-வது இடத்தில் இருந்த ஆனந்த ராகம் தொடர் 7.45 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று 8-வது இடத்தில் உள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் 7.22 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளது. ஆஹா கல்யாணம் தொடர் 6.68 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து 10-வது இடத்தில் உள்ளது.

எப்போதும் போல சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 6 இடங்களை பிடித்துள்ளது. அடுத்த  இடங்களை விஜய் டிவியின் தொடர்கள் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT