செய்திகள்

கேம் சேஞ்சர் ரிலீஸ் எப்போது?: தயாரிப்பாளர் தில் ராஜு பதில்!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார். 

DIN

இயக்குநர் ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ‘கேம் சேஞ்சர்’ படத்தினை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளார். 

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து ஷங்கர், ராம் சரண் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கேம் சேஞ்சர் படத்தின் கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் 1,000 ஸ்ட்ண்ட் கலைஞர்கள் பங்குபெற உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் புதிதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அதாவது இந்தப் படத்தின் கதையை எழுதியது கார்த்திக் சுப்புராஜ். 

அரசியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தை ஆகஸ்ட் 15, 2024-ல் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு படம் 2024 செப்டம்பர் மாதம் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 

எக்ஸில் கேம் சேஞ்சர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா திருமண க்ளிக்ஸ்!

டி20 உலக கோப்பை: அரையிறுதிச் சுற்று வாய்ப்பைத் தக்க வைத்த இந்தியா! அபார வெற்றி!!

அரசு விழாவில் மயங்கி விழுந்து முதியவா் உயிரிழப்பு!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

SCROLL FOR NEXT