செய்திகள்

‘என்னைப் பின்தொடர்ந்து வராதீர்கள்’- ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கிய தனுஷ்! 

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. 

நேற்று இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லுரி, நடிகை சம்யுக்தா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் தனுஷ் தனது ரசிகர்களுக்கு, “நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காது. இருந்தாலும் உரிமையுடன் சொல்கிறேன். எனது காரை பின் தொடர்ந்து வராதீர்கள். உங்களை நினைத்து பயமாக இருக்கிறது. நான் எப்போதும் இதை ஊக்குவிக்கமாட்டேன். உங்களுக்கென குடும்பம் இருக்கிறது. அதை பார்த்துக்கொள்ள நீங்கள் வேண்டும். தயவு செய்து இதை பின்பற்றுங்கள்” என செல்லமாக அறிவுரை வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT